அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

ஒரு வைகாசிக்கனவு

இன்றைய தூக்கத்தில் எரிநட்சத்திரங்கள் கண்டேன்.
பூவாய்ப் பொரிந்து பொறியாய் என்நாட்டில்.
புகைகக்கிப் போனதிலும் உடல் பொசிந்தவாசனை.
வனவாசம் அனுப்பிவிட்டும் தொடர்ந்து வந்த கைகேயி.
குடிலற்று மரம் வாழ்ந்த கோரத்துக்கும் கொடுமையிது.
குழந்தை கொடி குமர் கிழடு செடி பேதமற்றுப் பெருஞ்சேதம்.
நரமாமிசப்பசி கொண்டு நகர்ந்தனவாம் அயல்மிருகங்கள்.
மொழிதெரிந்த பாவத்திற்கு முகம் மறைத்து என்மக்கள்.
இது கவியா என்பதல்ல என்பிரச்சனை
தீமழை பொழியலிலே திரைவிலக்கி
இனி(ய) தேவகானம் எனக்கெதற்கு?
இதில் நிறுத்தி,என்னை அழவிடுங்கள்.
இயலுமானால், நாளை சந்திப்பேன்.
இல்லாவிடினும், என்றாவது...
எங்காவது ஓரடர் காட்டில்.....

-18 05 '97 (மனஞ்சோர்ந்தவொரு குளிர் மில்வோக்கி மாலை)

0பின்னூடுகை:

Post a Comment

<< Home