அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

விரல்கள்

விரல்கள் வெகுவாய் வேடிக்கை நிறைந்தனவாம்;
மனம் பதைக்கையில் தம்முள் உடலுறவு கொள்ளும்;
வேகம் பிறக்கையில் ஒன்றை ஒன்று தட்டித் தேய்த்துச் சூடேற்றும்;
தம் தலை கனம் கொண்டு நகம் வளர்த்து
அவை வெட்ட மனம் உடைந்து முதுகு சொறியவும்
திராணி செத்து மடிந்திருக்கும்,
மீளப் புலி வலிப் பிறை நகங்களும்
நிலம் நோக்காத் தலைக் கனங்களும்
தம் பெயர் சொல்ல ஓங்கி எழும் வரை.
தம்மோடு ஒட்டி இருப்பவரை இடை வெளி வளி விட்டு
பக்கத்துக்கை விரல்களைக் காற்றுத் தள்ளிக் கட்டிப் புணர்ந்திருக்கும்.
பெண் உடலாய் இடை(ச்) சிறுத்து
அதன் கீழிடை உருளப் பருத்து
கடை கை உள்ளம் ஒட்டி நர்த்தனமாடும்
நகமுகத்தில் நாணச் செம்மை படர்ந்தோட.
இத்தனை நேரம் காலம் போகாமல்
வீணாகிக் கவனித்திருந்து பார்த்ததில்
பத்துக் கை விரல்களும் வெகுவாய் வேடிக்கை நிறைந்தனதாம்.
நாளைக்கும் நேரம் நான் தின்ன இப்பக்கம் வந்து நின்றால்,
கால் விரல்களை வேறு கண்டு உங்கள் கண் காண எழுதிவைக்கிறேன்.
அவைகளும் தம் கை நண்பர்போல
வெகுவாய் வேடிக்கை நிறைந்த பத்து குட்டிக் கோமாளிகள்என்றே
தோன்றுகிறன இப்போதைய எண்ணப்பாட்டிற்கு.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home