அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

சங்கற்பம்

இந்த நாளுக்கொரு எளிமையான சங்கற்பம்;
சென்றாண்டு இத்தினத்தில் தின்ற நாட்கள் தன்னில் ஈன்ற பிழை
என்னவென்று,
இவ்வாண்டின் காலைகளில் வாயில் எழுப்ப வந்து நிற்கும் நாட்களிலே
எண்ணியிருத்தற்கு மட்டுமே இவ்வாண்டு கழித்தலென்ற
வலுத்த திண்ணமது எண்ணமதில் ஏறியிருக்க
இன்று வரும்
இந்த நாளுக்கொரு எளிமையான சங்கற்பம்;
மாசுபட்ட மனோபாவம் மாற்றிக் கொள்ள,
வாழ புதுவழி காட்டிக் செல்ல மனம் சங்கற்பிக்க
பின்னர் வரும் புத்தாண்டொன்றின் உதயம்
விழித்து வரவேற்கப் பார்த்திருந்தாற் போச்சு.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home