அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

ஓய்ந்திருக்கும் பொழுதெனக்கு

எண்ணங்கள் பலவோடும்.
எழுத்திடவோ தயக்கம்;
மனக்குழப்பம்.

அகம், சோர்வு கவ்வும்;
விரல்கள் விரக்தியுற்று
விச்ராந்தி பார்வை
வெளி
நீ
.
ண்
.
.
டு
தொலை
வெறிக்கும்.

சேற்றுக்குட்டையில்
கை அள்ளாமல்
ஓடும் மீன்கள்,
என் மனக்கவிகள்.

கணப்பொழுதே
தூண்டில் எழுத்துக்குத்
தப்பியவை,
எப்போதைக்கும்
இனி வரா.
செந்தாமரைக்சிறுகுட்டைக்குள்
எங்காதல்
சிக்கி
இறந்து போம்
சிறு பொறிக்
கற்பனை.

மூளை
ஓய்ந்திருக்கும் பொழுதெனக்கு.

எண்ணங்கள்,
விரல்களின் வேகத்தே
பிணக்குற்று
பிணைவற்று
கவிக்கருச்சிதைவு
நிகழ்வு.
ஆறாய ஓடும்,
அடங்காமற்
குருதி.


அகம், சோர்வு கவ்வும்;
விரல்கள் விரக்தியுற்று
விச்ராந்தி பார்வை
வெளி
நீ
.
ண்
.
.
டு
தொலை
வெறிக்கும்.

ஓய்ந்திருக்கும் பொழுதெனக்கு.

'99/03/11 வியாழன் 10:15 மநிநே

0பின்னூடுகை:

Post a Comment

<< Home