அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

தோழனுக்கு ஒரு கடிதம்*

இன்றுடன் ஆண்டு ஐந்து,
கடல் கடந்து நானகன்று;
தோழ,
உணர்விலோ, உலகம் இதன் மேலாய்
எம்மிடை நீண்டகண்டதுபோல்.
காலத்தின் தூரத்தே,
உன் தளம் இரவுபகலின்றி
நிலையியலிற் ஸ்தம்பிக்க,
எனதோ, இயக்கவியற்
காலைத்தொடக்கமே மாலைமுடிவாகி.
எனை நோக்கி நகர
மறுத்து உன் கொள்கை,
உனக்காய் நிற்றலின்றித்
துரத்தலில் என் பறப்பு.
எனினும்,
இத்தனை சடசக்திச்
சமாந்திர விகாரமுள்ளும்
ஒன்றுக்காய் முடிவிலி
ஒருங்கி நம் சிந்தனை;
~ஆறு ஆண்டு அரித்துண்ட
ஒரு மாலைச்சூரியனடி,
மாதாகோவிற்சூசைகடை,
ஒரு ரூபாய்-இரு கிண்ணம்
வெறுந்தேனீர் நட்பு~

-'96 புரட்டாதி

*எந்நிலை வரினும் நாடுவிட்டகலேன் என்றிருக்கும் நண்பனுக்கு.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home


 
Statcounter