அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

வாழ்க்கைத்தோழிக்கு...

தோழி,
இந்த என் எழுத்துக்களால்,
உன் காகிதங்கள் வீணாகின்றன எனக்
கவலைப்படுவது புரிகின்றது.
நீ எப்போதாவது,
செச்னியா, பொஸ்னியாவில் வீணாக்கப்படும்
உயிர்கள் பற்றி எண்ணியதுண்டா?
அவை மீள்வட்டச்செய்கைக்கூடே
இக்காகிதமாக்கப்படமுடியாதவை.
சல்வாருக்கேற்ற நகச்சாயம் நீ தேடுகையில்,
சாயும் உயிர்களின் ரணச்சாயம்
என்னுள் இருள் நிழலாய் நீண்டு வெறிக்கும்.
வாழ்க்கைச்
சாயைகளை கட்டியழும் நாங்கள், ஏனோ
சாராம்சங்களை வாய்களில் மட்டுமே
துப்பும் வெற்றிலைச் சாயங்களாகக்
குதப்பிக் கொள்(ல்)கிறோம்.
எனவே,
வரும் புது ஆண்டின் சங்கற்பமாய்,
உன் முகத்திற்கு
முகவரிகள் வேண்டாம்,
மூக்கு இது,
கண் இத்தகையது,
வாய் இப்படியே,
காது இவ்வண்ணம் என்பதுவாய்.
உன்னை,
வெறும் பெண்ணாக,
சக மானிடம் நேசிக்கும்
ஸ்நேகியாக மட்டுமே,
என்னை காணவிடு.

'94 ன் கடைசியிரவு.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home