அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

பன்னாடைகள்

பிய்ந்த பன்னாடைகள்,
பற்றைக்குட் பதுங்குவதாய்
மனம் எண்ணிப் பறந்தாலும்
காற்றோடு
பனை கழித்த
மயிர்களுக்காய்ப் பயந்து
புலிகள் பதுங்குவதில்லை.

பன்னாடைக்குப்
தும்பாய்ப் பிரியவும்
துகளாய்ப் பறக்கவும் மட்டும்தான்
தெரியும்.

காற்றைக் கிழிக்கின்றேன்
என்றெண்ணி
தான்
கிழிந்து
பறக்க எண்ணுவதை
கிழித்து வைக்கிறதில்
புலிக்கென்ன
வரும் இலாபம்?

ஆனாலும்,
புரியாய்ப் பிரியும்
பன்னாடைகளுக்குப் புரிவதில்லை
புலி பதுங்குவதும்
பாய்வதும்
தனியரு மான்மீதோ
இன்னொரு புலிமீது அல்லாமல்
பனை மட்டை உதிர்த்த
செதிற் செட்டைகளுக்காய்
இல்லையென்று.

பன்னாடைகளும்
கால் முறிந்து
வாய்கிழிந்த
சிலம்பாடிச் சிறுவர்களும்
ஒன்றே,
தம் பக்கம்
பார்க்காமலே இருப்பதை
அல்லது,
பாவம் பார்ப்பதை,
தம் ஒடிந்த கைக்குச்சு
வீரம் என்று
வியாக்கியானம் பண்னுவதில்.

பன்னாடைகளுக்குப் புத்தி
முற்றாய் இல்லை;
சில சிறுவர்களுக்குப்
புத்தி வளர்வதில்லை.

மன்னிப்பவர்கள்
மகாத்மா ஆகின்றார்கள்.

99/03/15 திங்கள் 00:39 மநிநே

0பின்னூடுகை:

Post a Comment

<< Home