குதிரை
நீண்டு
தொங்கும்
குதிரை முகம்
-மனம்.
வெடி கேட்ட
விலங்காய்
விரைந்தோடும்;
முள் தடவும்
-முதுகு.
மூக்கு முனைப்படும்
-பசும்புல்.
கல்லோடு
அதன்
பின் தங்கும்
-ஓடாமல்-
இருள்வனம்;
எள்ளவும்
இவை உணரா
எல்லையற்ற வெகுவேகம்.
அலைவுகளின்
அலை தாழ
ஆசுவாசமின்றி
மூசும்,
-பரி;
பின்னும்,
புள்ளற்ற
வான் நோக்கி
வளை வில் விட்ட
அம்பென்று
நோக்கின்றி
அலைந்தோடி
ஆரம்ப நிலம் மீளும்
காட்டுவெளியில்
-மூர்க்கக்குதிரை.
அடவிப்புரவி,
வெகு விரைந்தோடும்
விலங்கினம்தான்;
வெகு நேர்த்தி
அதன் கால்கள்.
ஆனால்,
நிலம் பாவ மட்டுமே
நியதிக்கப்பட்டவை.
கை அம்புகளுக்கு,
வான் நட்சத்திரங்கள்
குறியாகா.
இவை
புரவிக்கு
பசிக்கான
-பற்களில்,
நாக்களில்
புற்களின்-
புசிப்பு ருசிபோற்
சொல்லாமற்
புரிவதில்லை.
காட்டுக்குதிரைகட்கு,
கட்டாக் கால்களும்
அதிற் கடியேறு கதியுமே
காண உண்டு.
இலாயமில்லை;
மேலாளியும் கூட.
தினங்களின்
காலைகட்கு,
மாலைகட்கு
சொல்லிச் செய்யவென்று,
போர்,
போட்டி,
ஊர்வலம்,
மணமக்கள் பவனி
எதுவுமே
இயல்பிலில்லை.
கொள்ளும் புல்லும்
அள்ளிக் கொடுத்து
அத்தனைதான் இன்றைக்கு
என்ற
அளவுக்கடக்கலில்லை.
அந்தளவில்,
அடவிப்புரவிகட்கு
விலங்கிடா
விலங்குச்சுதந்திரம்
வெகு அதிகம்.
அதிக சுதந்திரம்
அலையவிட்டுக்
கெடுக்கும்.
எல்லையற்ற தேசத்தே,
நடந்து கடப்பார்
எல்லோரும்
-எந்நேரம் என்றில்லை-
எடுப்பார்,
எண்ணற்ற
பிடிக் கைமணல்.
ஏன், எதற்கென்ற
கேள்விக் கோலமிட
எவர்க்குமங்கே
நேரமில்லை;
நோக்கில்லை.
நெறிக் கட்டற்ற களங்களிலே
செயல் புரியப்
பொதுக்கடப்பாடு
எவர்க்குமில்லை.
இன்னும்,
உயர் வான்
உடு நோக்கி,
ஒரே குறி
அதுவென்று
நிலக்காட்டுத்தேசத்துக்
களங்களிலே
தளமமைத்து
ஓடித்திரியும்
என்
உளப்புரவி.
'99/03/12 வெள்ளி 01:38 மநிநே
தொங்கும்
குதிரை முகம்
-மனம்.
வெடி கேட்ட
விலங்காய்
விரைந்தோடும்;
முள் தடவும்
-முதுகு.
மூக்கு முனைப்படும்
-பசும்புல்.
கல்லோடு
அதன்
பின் தங்கும்
-ஓடாமல்-
இருள்வனம்;
எள்ளவும்
இவை உணரா
எல்லையற்ற வெகுவேகம்.
அலைவுகளின்
அலை தாழ
ஆசுவாசமின்றி
மூசும்,
-பரி;
பின்னும்,
புள்ளற்ற
வான் நோக்கி
வளை வில் விட்ட
அம்பென்று
நோக்கின்றி
அலைந்தோடி
ஆரம்ப நிலம் மீளும்
காட்டுவெளியில்
-மூர்க்கக்குதிரை.
அடவிப்புரவி,
வெகு விரைந்தோடும்
விலங்கினம்தான்;
வெகு நேர்த்தி
அதன் கால்கள்.
ஆனால்,
நிலம் பாவ மட்டுமே
நியதிக்கப்பட்டவை.
கை அம்புகளுக்கு,
வான் நட்சத்திரங்கள்
குறியாகா.
இவை
புரவிக்கு
பசிக்கான
-பற்களில்,
நாக்களில்
புற்களின்-
புசிப்பு ருசிபோற்
சொல்லாமற்
புரிவதில்லை.
காட்டுக்குதிரைகட்கு,
கட்டாக் கால்களும்
அதிற் கடியேறு கதியுமே
காண உண்டு.
இலாயமில்லை;
மேலாளியும் கூட.
தினங்களின்
காலைகட்கு,
மாலைகட்கு
சொல்லிச் செய்யவென்று,
போர்,
போட்டி,
ஊர்வலம்,
மணமக்கள் பவனி
எதுவுமே
இயல்பிலில்லை.
கொள்ளும் புல்லும்
அள்ளிக் கொடுத்து
அத்தனைதான் இன்றைக்கு
என்ற
அளவுக்கடக்கலில்லை.
அந்தளவில்,
அடவிப்புரவிகட்கு
விலங்கிடா
விலங்குச்சுதந்திரம்
வெகு அதிகம்.
அதிக சுதந்திரம்
அலையவிட்டுக்
கெடுக்கும்.
எல்லையற்ற தேசத்தே,
நடந்து கடப்பார்
எல்லோரும்
-எந்நேரம் என்றில்லை-
எடுப்பார்,
எண்ணற்ற
பிடிக் கைமணல்.
ஏன், எதற்கென்ற
கேள்விக் கோலமிட
எவர்க்குமங்கே
நேரமில்லை;
நோக்கில்லை.
நெறிக் கட்டற்ற களங்களிலே
செயல் புரியப்
பொதுக்கடப்பாடு
எவர்க்குமில்லை.
இன்னும்,
உயர் வான்
உடு நோக்கி,
ஒரே குறி
அதுவென்று
நிலக்காட்டுத்தேசத்துக்
களங்களிலே
தளமமைத்து
ஓடித்திரியும்
என்
உளப்புரவி.
'99/03/12 வெள்ளி 01:38 மநிநே
0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home