அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

காற்றுவெளியில் இறக்கை

நேற்றையைப் போல்
நாளைக்கும் வலைப்படலாம்.
ஆனால்,
இன்றைக்குச் சுதந்திரம்.

கூண்டு மடக்கிய
கால் அகட்டிக்
காற்றுவெளியில் இறக்கை.

சிறகு விரியத் தெரியும்,
சிட்டு, எத்துணை சின்னதென்று;
வெளி, அற்றுக் கிடக்கும் எல்லையென்று.

இத்தனை நாள்
சுட்டிக்கூட்டின் நிழற்றளைக்குக்
கட்டுப்பட்டிருந்ததற்காய்,
சின்ன வெட்கவுணர்வு.

முகம்பட்டு முகரும் குளிர்காற்று சுகம்.
வானவெளி சொல்லும்
-கூட்டுக்குள் வந்திராச்சேதிகள் ஆயிரம்.
கூடவே,
கூண்டு திரித்த பொய்களும்
ஒவ்வொன்றாய்
அவிழ்ந்துதிரும்.

கால் அகட்டிக்
காற்றுவெளியில் இறக்கை.

நேற்றையைப் போல்
நாளைக்கும் வலைப்படலாம்.
அறியாது;
ஆனால்,
இன்றைக்குச் சுதந்திரம்.

இனியரு தளைப்பட
மறுக்கும் சிட்டு.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home