அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

நானும் என் தெருவும்

முலை கசியும் தெரு
என் தோழன்.

தார்;
கல்.

அவி அனலுருக்கும் தோல்;
அரித்துக் கிளம்பும் கலம்.

அழுத்திப்போகும்
அடுத்தடுத்து வாகனம்.

எங்கும் கரு மை இளகியழுதது,
எங்கள் தெரு.

எட்டி நின்று
வெந்தபுண்ணில்
வெயில்வேல் குத்துவான்
துஷ்டன் கதிரவன்.

தன்வயத்தே
காலணிக் காதறுந்த
காற்பயணி
நிழல் குதித்துக் கத்தினான்,
"கொதிதார் அள்ளுதுபார்
என் பாதம்."

காலணிகூடி
மௌனித்த
என் தோழன்
பின்னும் கிடந்தான்
கார்மிதிக்க,
வெயிலிற்
கைவிரித்து.

மிதிவண்டியிறங்கி,
மிதியாமல் தள்ளி,
நிழற்புல் நிலம்
பொசியப்பொசிய
நடந்தேன்
நான்
நெடுகுக்கும்.


'99 ஜூன் 23

0பின்னூடுகை:

Post a Comment

<< Home