கூர்த்த இனம்
சிவப்புச் செவ்வரத்தை
வாய் விட்டுக் குழம்பும்,
"என் அன்புக்குரியோன்,
மஞ்சட் செவ்வரத்தையா?
சுடுசெஞ் சிவப்பரளியா?"
அதன் இலை
தன்னுட் புலம்பும்,
'எதுவானால்
எனக்கென்ன?
இரண்டுமே
நஞ்சு மலர்தான்;
பிஞ்சுப்பச்சையோ,
பிரியும் முதுபழுப்போ
என் இனியர்
என்றும்
இலைகள் மட்டுமே.'
பூக்களில்
அரிக்கும் பூச்சி
இலைகளில்
ஊர்ந்தவை புழுக்கள்.
அவைதாங்கு
கிளைகள்
பேசவில்லை;
உடல் ஒட்டியவை,
ஒன்றையன்று
பார்த்துக் கொண்டு
மட்டும் இருந்தன.
வாய் விட்டுக் குழம்பும்,
"என் அன்புக்குரியோன்,
மஞ்சட் செவ்வரத்தையா?
சுடுசெஞ் சிவப்பரளியா?"
அதன் இலை
தன்னுட் புலம்பும்,
'எதுவானால்
எனக்கென்ன?
இரண்டுமே
நஞ்சு மலர்தான்;
பிஞ்சுப்பச்சையோ,
பிரியும் முதுபழுப்போ
என் இனியர்
என்றும்
இலைகள் மட்டுமே.'
பூக்களில்
அரிக்கும் பூச்சி
இலைகளில்
ஊர்ந்தவை புழுக்கள்.
அவைதாங்கு
கிளைகள்
பேசவில்லை;
உடல் ஒட்டியவை,
ஒன்றையன்று
பார்த்துக் கொண்டு
மட்டும் இருந்தன.
0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home