அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

பிரதிபலிப்பு

முற்றாப்பிஞ்சு மூங்கில்
அலை முறித் திறைத்த
வாசனை வீசு கதிர்.

சொர்ணத்துகட் சோளக்கொட்டைகள்
கசக்கக் கொட்டிய வண்ணத்துமிகள்,
கண்ணில் ஏழு.

தெறிக்கும் திசை.

அவை
வளைவும் நெளிவும்
விழி வழிவனைப்பில்.

சுடு கதிர்த்தடத்தே
கண் நடத்தும்
கயிறுபற்றித்
தன் கால்
மேலே.

யாத்திரை உச்சத்தே
என்
இருள்
உள் விட்டத்தே
எழும் சூரியன்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home