என் பெயர் எருமை
தமிழ் படிக்கத்தெரியாதவர்களுக்காக, முதலில்....
எருமைகள்: ஓர் அறிமுகம்-
"The buffalo or bison live in family units. There's one Male Buffalo
that will lead the herd. Sometimes you will get to see another Male
challenge for that right. It is a sight to see and hear. As the
Buffalo seem to be on the move all the time and seem to never sleep.
That could be in the middle of the night. Buffalo seldom let things
bother them at Wild Winds." -
இனி எருமைகளைப் பற்றி....
என் பெயர்
எருமை.
முகவரி,
முக்கால்முதுகுச்
சேறு.
எப்போதும்
எனக்குப் புரியாததாய்
எல்லோர்க்கும் புரிந்தது,
-என் முதுகில் மழை.
குற்றச்சாட்டு:-
குளிப்பாட்டிக் கோயிலருகு குந்த வைத்தும்
குதித்தோடிப்போய்க்
குட்டைத் தென்னை மட்டையில்
கரட்டுமுதுகு தேய்த்தது,
தூக்கி, தூய்மையின்மையின்று காக்கப் போனோரை,
கண்ணியவான்களைத்
தூக்கித் தாக்கிக் கடாசியது.
எருமைகட்கு வியர்ப்பதில்லை;
இது விளங்கியும்,
வியர்க்கும் மனிதர்களின்
வேண்டா வில்லங்கத்துக்கு,
குழாய் நீரிற் குளிப்பதற்குப் பிறந்ததில்லை,
குட்டை எருமை.
சேற்றுக்குட்டையில்,
கூர்த்துச் சிறந்த மனிதர் குளிப்பதில்லை;
அதனால்,
எருமைகள் குதிப்பதனாலும்,
குளிப்பதனாலும்,
அவர்க்கேதும் ஏதும் குறைவதுமில்லை
- அவர்தம் கும்மாளத்தே.
முதுகில் மொத்துவது மழை என்று
எருமைகட்குப் புரியாதென்ப தெப்போது, எப்படி புரிந்தது,
இந்த மனிதர்க்கென்று
எப்படி யோசித்தும்
எருமைகட்குப் புரிவதில்லை.
புரியத் தேவையற்றதைப் புரிந்துகொள்ள முயலும்
புரிதலைப் புணர்வது எருமைகள் புத்தியல்ல.
எருமைகளைப் புரிந்து கொள்ளுங்கள்;
உங்களைப்போலின்றி,
எங்களின் பாட்டிற்கு
எங்களையேனும் வாழவிடுங்கள்.
எழுதிப் படிக்கத்
தெரியார்க்கு,
என் பெயர்
எருமை;
எல்லாம் அறிந்த
அறிஞர்க்கு,
Bison bison Linnaeus.
அப்படித்தான்;
பிற மனிதர்க்குத் தெரிந்தால்
எருமைக்குத் தெரியாதோ,
தனக்கிட்ட பெயரெல்லாம்?
புரிந்துகொள்ளுங்கள்;
புரிதலற்றுச் செத்தவை அல்ல,
காட்டெருமைகள் புத்தியெல்லாம்.
எச்சரிக்கை!
(குளத்தடியில்,
கூட்டாக,)
எருமைகள் இப்போது
எண்ணக் கற்றுக் கொண்டிருக்கின்றன,
-(இவ்வூரில்)
எத்தனை பேர் மனிதரென்று.
99/07/16
எருமைகள்: ஓர் அறிமுகம்-
"The buffalo or bison live in family units. There's one Male Buffalo
that will lead the herd. Sometimes you will get to see another Male
challenge for that right. It is a sight to see and hear. As the
Buffalo seem to be on the move all the time and seem to never sleep.
That could be in the middle of the night. Buffalo seldom let things
bother them at Wild Winds." -
இனி எருமைகளைப் பற்றி....
என் பெயர்
எருமை.
முகவரி,
முக்கால்முதுகுச்
சேறு.
எப்போதும்
எனக்குப் புரியாததாய்
எல்லோர்க்கும் புரிந்தது,
-என் முதுகில் மழை.
குற்றச்சாட்டு:-
குளிப்பாட்டிக் கோயிலருகு குந்த வைத்தும்
குதித்தோடிப்போய்க்
குட்டைத் தென்னை மட்டையில்
கரட்டுமுதுகு தேய்த்தது,
தூக்கி, தூய்மையின்மையின்று காக்கப் போனோரை,
கண்ணியவான்களைத்
தூக்கித் தாக்கிக் கடாசியது.
எருமைகட்கு வியர்ப்பதில்லை;
இது விளங்கியும்,
வியர்க்கும் மனிதர்களின்
வேண்டா வில்லங்கத்துக்கு,
குழாய் நீரிற் குளிப்பதற்குப் பிறந்ததில்லை,
குட்டை எருமை.
சேற்றுக்குட்டையில்,
கூர்த்துச் சிறந்த மனிதர் குளிப்பதில்லை;
அதனால்,
எருமைகள் குதிப்பதனாலும்,
குளிப்பதனாலும்,
அவர்க்கேதும் ஏதும் குறைவதுமில்லை
- அவர்தம் கும்மாளத்தே.
முதுகில் மொத்துவது மழை என்று
எருமைகட்குப் புரியாதென்ப தெப்போது, எப்படி புரிந்தது,
இந்த மனிதர்க்கென்று
எப்படி யோசித்தும்
எருமைகட்குப் புரிவதில்லை.
புரியத் தேவையற்றதைப் புரிந்துகொள்ள முயலும்
புரிதலைப் புணர்வது எருமைகள் புத்தியல்ல.
எருமைகளைப் புரிந்து கொள்ளுங்கள்;
உங்களைப்போலின்றி,
எங்களின் பாட்டிற்கு
எங்களையேனும் வாழவிடுங்கள்.
எழுதிப் படிக்கத்
தெரியார்க்கு,
என் பெயர்
எருமை;
எல்லாம் அறிந்த
அறிஞர்க்கு,
Bison bison Linnaeus.
அப்படித்தான்;
பிற மனிதர்க்குத் தெரிந்தால்
எருமைக்குத் தெரியாதோ,
தனக்கிட்ட பெயரெல்லாம்?
புரிந்துகொள்ளுங்கள்;
புரிதலற்றுச் செத்தவை அல்ல,
காட்டெருமைகள் புத்தியெல்லாம்.
எச்சரிக்கை!
(குளத்தடியில்,
கூட்டாக,)
எருமைகள் இப்போது
எண்ணக் கற்றுக் கொண்டிருக்கின்றன,
-(இவ்வூரில்)
எத்தனை பேர் மனிதரென்று.
99/07/16
2பினà¯à®©à¯à®à¯à®à¯:
இரமணி,இதோ என் வாக்கு உங்களுக்கு!பக்கத்திலிருந்தால் கைலாகு தந்து உச்சிமோந்துகொள்ளலாம்.
By Sri Rangan, at Tuesday, May 03, 2005 5:40:00 AM
பாராட்டுக்களும் நன்றியும்.
இன்னொரு எருமையிடமிருந்து.
By SnackDragon, at Tuesday, May 03, 2005 8:39:00 AM
Post a Comment
<< Home