அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

மழை

எண்போகம் எண்ணிப் பொய்த்தது வான்.
ஒரு நீர்ப்பூக்கூட நினைந்து அழ மறுத்தது
திரள்நரைத்துகில் முகில்நாரி.
குறுக்குக்கு மலை மேற்கும் குறுக்கோடிக் கடற் தெற்கும்
நீளத் தடப்போக்காய் நகர்ந்து தின்று முடி த்தது தன் நேரம்.

குல மெலாம் பெண்டிர் கரைந்தனர் கற்பு,
உள முறைய நிறைந்து படிந்தது கருங்கறை
எனக் கரைந்தன கூரைமேல், காகங்கள்.

ஒருநாட்காலை, தீட்டுப்பட்டவோர் பெண் போனாள் தன் வீட்டுக்குள்.

பெய்யென்று குலப்பெண்டிர் ஒரு சொல் உரையாமலே
பிளந்தது உதரவாய், ஓடு மேகமெல்லாம் முகம் இருண்டு.
புயல் பட்டுத் தெறிக்கப் பொழிந்து பாய்ந்தது
பெரும் போகங்கள் பொய்த்த மழை.

நனைந் துடல் நடுங்கின உச்சாணிக் கொப்பிரு காகங்கள்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home