அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

super stars, shooting stars and comets in the planet of ....

எரிந்தாலும், எரி நட்சத்திரங்கள் எளிதில் இறப்பதில்லை;
எரியக் கண்பட்டோர் வாழ்வின் இனிவரு எல்லாச்செயலிருந்தும்
என்றோ நான் சுட்டிக் கூறியதிது என்று சொல்லிக்
குறுக்கிட்டு ஒளிர்ந்திருக்கும்.

வால்நட்சத்திரங்களும் மீள வரும் வான்வெளியில்.
முன்வருகையிலே, முடிந்துபோன காரியம்மேல் கட்டியம்கூறியதாய்
வால்வெள்ளி சாக வசைபாடியோர் வாழ்வு முடிந்து போயிருப்பார்..
... வால்நட்சத்திரங்களோ வளைந்து மீள வரும் வான்வெளியில்
வலமாய்ச் சுழன்று அனுமார் வாலாய்ப் பின் நீண்டெரிய வாயுத்துகள்.

விண்மீன்களோ வேறு வேலையற்றவை;
மாலை முதல் மறுகாலை வரை தூவி விட்ட அலுமினியத்துகட்
படிவாய்த் தூறித் தூங்கியிருப்பவை வான்கொல்லைத்தோலினிலே.
ஞானம் அற்றோர்க்கு என்றோ இறந்து முடிந்த முதுவுடுகூட இன்னும்
உயிர்ப்பதாய்ச் சுட்டிக்காட்ட,
விட்டுவிட்டுச் சிமிட்டல், விண்வெளியின் 'அற்றவையின் இருப்பு' .......
வேதாந்தக் கண்சொடுக்கு.
எத்தனையோ நட்சத்திரம் எப்போதும் இருட்டில் எழுதிக்
குத்துக்காலிட்டிருந்தாலும்
எம்மில் எத்தனைபேர், அதில் எத்தனை எம் எதிர்க்காலம் எழுதிக்
கணித்திட்டதாய் எண்ணிக்கொண்டோம்?

ஆக, ஒளி பட்டுத் தெறித்த சிறு குட்டிக்கிரகம்கூட
புவித்தடம்படு தடயம் மாற்றுமெனப் பேசிக்கொண்டார் பெருஞ்சாத்திரத்தில்.

ஆனால், பெரு நட்சத்திரங்கள் தம்மொளிச்சுட்டலுக்குச் சுற்ற ஒரு
தொகுதிக் கிரகம் சேர்க்கமட்டும்
தாமாய்ச் சுடர்ப்பட்டுச் சிமிட்டிக்கொண்டிருந்தனவாம் சுட்டுப்போகும்வரை வெளி
நட்சத்திரங்கள்.

மனிதர், சகுனம்சொல் எரிநட்சத்திரமும் வால்வெள்ளியும்
குட்டிக்கிரகங்கள்கூட்டிச் சேர்த்துச் சபித்துப் பின்,
அரசவெள்ளிப்பொட்டணிக்கு, பெண்முத்தவுதட்டொட்டலுக்கு கிட்டச்சமானம் என்றார்
வான் வெள்ளித்துளிர்துலங்குமேனி மின்மின்னிச்சிமிட்டல்,
முற்றச் செத்து செய்நன்றி முன்னவைக்கு.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home