அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

புற்கள் என்றுமே பொய்யுரைப்பதில்லை

கோயிற்சிலைகளின் ஸ்தனங்கள்போல்
பொய் யுரைப்பதில்லை புற்களெல்லாம்.

சிறியவை புற்கள்.
அவை காதுப்பற்களின் அளவு, கட்டெறும்பு வாய் அமிலச்செறிவின்மட்டு.
மிதிபட்ட புற்கள்கூட, உருவில் விரிவதில்லை தேய்வதில்லை.
அளவாய்ப் பத்திரப்பட்டவை அவை பரிமாணங்கள்.

நாச்சியார் தலைக்குப் பெருத்தது அவள் கற்கொங்கைப்பிரமாண்டம்.
சிற்பியின் உள ஏக்கம் கைச்சிலிக்கன் சிப்பமாய் உள் எடுப்புடைக்கும்.
நாளது மாற்றிய பட்டூடும் மதர்க்கும் மார்பு மட்டும் நிலைக்கும்
தீபம், ஆரத்திக்குள்.
ஸ்தனமுலைப்பருப்பம் உட்துருத்தும் மூடிய மூலஸ்தானக்கதவின் பின்னும்
நெடுநேரம்.

பிரமாணத்திற் பொய் சொல்லாச் சிறு புற்களைப் பற்றியெவரும்
பேசுவதில்லை.
கற்சிலைகளைக் காணுமிடத்து, நயனம் ஸ்தனம் பற்ற, நாகரீக
வணக்கம் நம்மிடைத்
தொடரும்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home