அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

நிகழ்த்தல்

தினவெடுத்துத் தின்றிரு தென்றல்
கயிற்று வாசனையைக் கடித்துத் துப்பு
நுகத்தடியில் உனைப் பூட்டி உழும் உன் மாடு
உணவுக்கோப்பையுள் உட்கார்ந்து மலம்கழி
எதிரிகளை அணைத்துப் புணர்
நீர்வண்ண ஓவியத்தால் ஒரு வரிக்கவிதை நடனமாடு
சூரியனின் நிழலை உன் ஒளியால் உருவாக்கு
அகதிகளை வாய் அகட்டி அச்சமின்றிச் சிரிக்கச் சொல்
நிலவினை எடுத்து நக்கிப் பாலை மட்டும் சுவைத்து முடி
நாளைக்கென்றேதும் தேவை தேங்க மிச்சம் வைக்காதே

இவையெல்லாம் எப்படி நிகழ்த்தலென என்றென்னைக் கேட்காதே.
உனை மீறி எதும் நிகழலாம் உன் இன்றிரவுக் கனவில்,
தலை மாறி எதுவுமே நிகழாமலும்போகலாம் என்பதைப் போலவே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home