அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

கருத்துரிமை

மேற்பட்டோர் தம் கதையைப் போற்றப் பொத்திக்கொண்டார்.
தாழ்த்தப்பட்டோரென்பார் தம் மூச்சைத் தாமே இழுத்து விட்டுக்
கொள்வோமென்றார்.
மாதர், எம் விலங்கு நாமுடைக்க நீ சற்றே விலகென்றார்.
'அழுக்குச் சேர்த்தன' என்று அவதூறு சொல்லியதாய் முரட்டு நகங்களுடன்
முன்னமே ஓர்
வழக்கு.
யார் கண்டது? பூ வண்ணாத்துப்பூச்சிக்கும் ஒரு வழக்குரைஞர் இருக்கலாம்.

நிறையரங்கிற் கோல் குந்த தனி நாற்காலி மட்டும் காலி.

'ஆட்புகா என்னுடல் இடுக்குப் பற்றி எல்லாம் எடுத்தெழுது' - ஆடை
உருவி அம்மணமாய்ப்
பெண் கவிதை
என் சாமி உனக்கென்ன? எதுவும் சொல்லலாம் எவ்வளவும்
பிறகு, குற்றக் கூண்டேற்றிச் சுட்டுவது குருகுலமல்லோ?

0பின்னூடுகை:

Post a Comment

<< Home