அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

நாளையும் மற்றுமொரு நாளே நமக்கு*

சரவெடிகள் கொட்டும்;
ஒளிமழைகள் சொட்டும்.

சனங்கள் வெறுங்கை தட்டும்.
பொய்ச்சாத்திரம் வாய் பொத்தும்....

புவியழிந்து போகாது;
பொன்மழையும் பெய்யாது.

துடிகாற்றுக்கு மூச்சு நொந்து சாவில்லை;
அடிகண்ணிமைக்கும் சடுதி மூப்பதில்லை.

வாக்கில் மொழி தினவழக்கம்போல்;
வயிற்றில் பசி ஓயா இடிமுழக்கம்போல்.

செஞ்சூரியனும் கிழக் கென்றே நிலைக்காது,
தேவகுமரரும் திசையெங்கும் முளைக்காது,
தேசங்கள் நகரும்....
தீமை நன்மைகள்
தினம்போற்படரும்.



நாம் வகுத்த
கணணிப்பூச்சியத்துப்பூச்சிப்
பொய்மைச்சிறகடிக்கப்பால்......

......நேற்றதைப்போல்,
நிலவெறிக்கும்
நாளையும் மற்றுமொரு நாளே
நமக்கு

'31 டிஸெம்பர் '99

* ஜி. நாகராஜனின் ஒரு கதைத்தலைப்பு தந்த வரி

0பின்னூடுகை:

Post a Comment

<< Home