அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

இருளைப் பிடித்துக்கொள்

இருளைப் பிடித்துக்கொள்;
எல்லாமாய்ச் சேர்த்துக்கொள்.
முடி பூத்துத்துளிர் தளிர்க்க
முடிந்து கொள் ளுன்
முந்தானைமூலைக்குள்.
இரட்டிக்கக் கொத்தித் தின்
எல்லா இருட்குஞ்சும்.
அழுக்குச் சலித்து
அரவணைத்துக் கொள் ளவற்றை.
பாலைப்படுத்து, சோலை இருள்வனம்.
பட்டுப்போகட்டும் நிழற்கறுப்பு,
உன் தொட்டுக்கொள்ளலின் உச்சத்தில்.
இருளைப் பிடித்துக் கொள்
உனக்கிதமாக;
என்னை மட்டும் விட்டுச்செல்.
நடைபாதை ஓரத்தே,
நாட்ட வேண்டும் நான்
சில சூரிய நாற்று.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home