அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

Unedited flow...

இதற்கொரு பதில் சொல்லலாம்;
என்றாலும் போகின்றேன்.

எனை நீர் புரிந்ததும்
ஏனையோரை நான் புரிந்ததும்
எங்கோ ஒரு வலையின் இழையிலே
பிறந்த துளையென்று எண்ணிக்கொண்டு
போகின்றேன்.

கற்றதினாலா வதெல்லாம் சிறப்பல்ல,
கற்றதே நிற்றுப் பிழைத்தலே நீதியென்று
எவரையோ பற்றி,
இதற்கொரு பதில் நான் சொல்லாம்;
என்றாலும் போகின்றேன்.

பாம்பை விட்டுப் படர் புற்றை
நொந்தென்ன பயன்?

கைதட்டக் கூட்டம் சேர்க்கப் பறப்பவை காக்கை;
கைதட்டும் எல்லாத்திசையும் சிந்தும்
புரட்டாதி உணவுக்கு புரையெடுப்பு; படையெடுப்பு.

எனது காலம் இதனிலும் நீளக்கூடும்,
மேலெழுத்தைவிட்டு,
உளவழுக்கை மட்டுமொதுக்கி
உணரக்கூடிய மனிதர்கள்
முகமெதிரே ஒரு காலை
மோதக்கூடும்,
என் கண்கள்.

அவரவர்க் கதது.
எனக்கு இது;
உமக்கு அது;
மாட்டுக்கு கொம்பு;
தமிழுக்கு தலையாட்டு;
காலத்துக்கு விளையாடு.

இரு படி காசுக்கும்
ஒரு முடித்தேங்காய்க்கும்
சில பிடி அரிசிக்கும்
சில்லறைச் சபாஷ¤கட்கும்
தெருத்தெருவாய்ப் படியேறி
தமிழைக் கவரிவீசப்போனவரின்
கடைக்குட்டியாகமாட்டேன் நான்.

பரம்பரைத்தமிழை விற்றுத் தின்கின்றவர் பலர்;
விற்றுத்தின்ன தமிழை விட்டுப் போகிறவர் சிலர்.

ஆதிக்குறும் அகத்தியன் ஓர் அகண்ட அகந்தை மாயை;
மிதிக்கக்கூ ஓர் அழுக்கு எச்சம் விட்டுப்போனதில்லை
இந்த மொழிக்கு.
இளைய தொல்காப்பியன் மட்டும்தான்
தமிழின் தொல்நிலையைச் சுட்டிச் சொல்லவிட்டுச் சென்றான்
கற்றோர்க்கும் மற்றோர்க்கும்.

நாய்கள் சாகலாம்; நரிகள் சாகலாம்.
இன்றைக்கு முகம்தொலைந்தாலும்,
இனி வருநாளைக்கு
நான் சாகமாட்டேன்.

எரியக் கொக்கிங்கே இல்லை
நான்,
கொங்கணர்களே.

ரௌத்திரம் பெருக்கட்டும்
உடல் உருகும் தினம்வரைக்கும்

ஆறுவது சினம்
ஆறாதது வெஞ்சினம்.

எப்போதாவது,
திரும்ப முளைக்கும்
எழுதுகோல் என் கையில்.

அதுவரையில்,
அங்குமிங்கும்
ஆறேழு வைப்பாட்டி வைத்த அரசரையும்
அரசரின் அவள்களையும்
அவர்களுக்கு இவர்கள் சுமந்த அவல்பொட்டணிகளையும்
ஆணவம் கன்மமாயை அழுக்குகளையும்
அவரையும் தடுக்கிவிடுகின்றபோதும்
நொடிக்கொரு
'இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும்
அம்மென்றால் ஆயிரமும் தும்மினால் தொழுகையும்'
என்றெண்ணிப்
பாடிக்கொண்டிருங்கள்.

வருகிறேன்,
உள்ளத்து
வெஞ்சினம் வற்றாமலே,
இங்கிருருப்பின்
வற்றிப்போகக்கூடுமேயென்றெண்ணி
விடைபெற்று.

திருவாதிரை நாள் வந்தேயாகும்
சிவவேடப்பரிகளும் தோல்முறிந்து பழைய கபடநரிகளா ஓடக்கூடும்....

0பின்னூடுகை:

Post a Comment

<< Home