அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

பொறிமுறைவரைதலிலிருந்து ஓவியத்துக்கு.....

மற்றக் கோடுகளின் தொனிகளைப் பற்றிய
தனிப்பட்ட தொகுப்புக்குறிப்புக்கள் இவை.

சீதைக்கும் சஞ்சீவிக்கும் சில சில்லறைக்குமாய்
கடலைத்தாண்டும் அனுமார்க்கான
நெறிக்கையேட்டு வழிகாட்டியுமாம்.

கட்டித்த கோடுகளைக் கச்சிதமாய்
வெட்டிக்கொண்ட வரைகலைஞர்க்கும்
ஒழுக்கமை கோட்டுக்குள் ஓவியம் ஓடவிட்ட
கன்டின்ஸ்கியுக்கும் கனச்சித்திரக்காரருக்கும்
(புதிது) ஆன குறிப்புகள் அல்ல இவை.

வட்டத்தை வண்டிவளையமென்றும்
அகல்விட்டத்தின்பேரிலும் வில்லமை
நாண் துண்டத்தே தொக்கித்த துளிமுனையிலும்
கண்டுகொள்கிறவர்க்கான கணினிக்குறிப்பிது.

முக்கோணச்சட்டப்பொருத்தெல்லாம்
மேலுத்திரமுகடென்று,
H, HB முனை மழுங்க,
நேர்கோட்டு உத்திரவாதம் தக்கவைத்துக்கொண்டோர்கான
பனைக்கறுப்பு B நுனித் திசைப்படிவு இக் கைக்கூற்று.

அடி, பாகை, ஆழத்து அளவுக்கப்பால்,
அடங்கா வளைகோட்டு மீறல்களை
மீட்டிக்கொள்ள வேண்டியோர்க்காய்
மிகுந்திருப்பவையும் இஇவற்றுள் அடக்கம்.

சிறைக்கோடுகளைச் சிரைத்துக்கொண்ட
செல்கோலங்களின் செறிவிருப்பு.

மட்டங்களும் மானிகளும் தலை முட்டியுடைத்த
மரணச் சித்திரக்குறிப்புகளும் இவற்றுட் சுருங்கும்.

பொறிமுறைவரைதலிலிருந்து ஓவியத்துக்கு.....

கையேட்டுக்குறிப்புகளைச்
சொல்லாமற் போகின்றேன்;
சொல்லியும்கூடத்தான்.

'00, ஜூன் 25

0பின்னூடுகை:

Post a Comment

<< Home