அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

உள்ளிழுப்பு

உள்ளிழுத்துக் கொள்ளல்,
ஓடுள்ளவைக்கு மட்டுமே;
ஓடுள்ளவரைக்கு மட்டுமே.

மற்றவைக்கு,
மழையும் எச்சிலும்
மார்பிலும் முதுகிலும்.

ஓட்டுக்குப் பின்னால் ஒளியும் கணத்திலும்
தாக்குதல் மட்டுமே தரிக்கும் ஆமை உளம்.

காட்டுவெள்ளத்தி லோடும்
ஆற் றாமையும்
கரையேறும் ஓட்டோடும்
உள்ளிருப்போடும்
உயிர்த்துடிப்போடும்.

உள்ளிழுத்துக் கொள்ளல்,
வல்ல கல்லோடுள்ளவைக்கு மட்டுமே.

தாக்குவேளை வரைக்கும்
ஓட்டுக்குள் ஒளிரு முலகம்,
இருளுட் தலை பதுக்கி.

ஆமை மறந்து
முற்றாய்ச் சுற்றும்
மிகுதி-முழு அகிலம்.

ஆற்றுக் கரை வரும்வரைக்கும்
ஆற் றாமைக்குத் தேக்கம்.

ஆமைகள் ஆயுள்,
உதைக்கும் மானுடர் போல்
அத்துணை குறுக்கமன்று.

ஓடுள்ளவரைக்கும்
ஆமை உலகங்கள்
உட் சுழன்றியங்கும்.

கல ஆமைக்கு
களம் அவதானிக்கும்
காலம்.

தரிப்பு.

'00, ஏப்ரில் 11, செவ். 12:59 மநிநே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home


 
Statcounter