அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

தூசு

துரத்தத்துரத்திக் கலையும் தூசு.
சுற்றிப் பறத்தலும் படிதலும்
படர் இருப்புதன் கூற்று.

ஒட்டிக்கொள்ளக்கொள்ள
உடல் உடைதலும் ஊதலும்.

மூலைத்தூசுகூட முடிந்தவரை
முனைந்து பார்க்கின்றது,
தன்முனைப்பின் உரித்தை
உரித்துக்காட்ட.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home