அலைஞனின் அலைகள்: கணம்

Friday, December 17, 2004

வருஞ்சொல்

வற்றிய வட்டக்கிணற்றை விட்டெம்பி
வானவெளிவிட்டத்துக்கு வாருங்கள்.
மேற்காற்று புதிது; எண்மைக்கும் மேலாய்
எண்ணிற் பரந்தது திசை முழுவெளி.
வாற்பேத்தைக்குஞ்சு வடிவு மாறட்டும்
ஓரிணைக் குருவிச்சிறகோடு
நிலவுக்குமப்பால் நீண்டு
நெடுகப் பறக்க.

தூர்ந்த புற்றுத்தோல் தோண்டித் துழாவி
இற்ற தும்பை, புல்லென்று போராட்டம்.
உயரக் கிட்டத்தே சென்று
சட்டெனத் திறக்கட்டும் விழிகள்.
நிலவும் விரிந்தது தன் விட்டம்;
ஒழுகும் பால் உள்ளூற்றாய் உன்னுள்.
ஒவ்வொரு சொட்டும் ஒரு சொல் முத்து.

பாசிக்குளத்துள்ளே பாவாடை கட்டி
நீராடிக் குளித்த நேரமெலாம்
சேற்று நாற்றமே சிறப்பு.

இன்றும் நானொரு சோதனை விவசாயி.
என்றும் பூமியில் புதியதென் புல்வெளி;
வெவ்வேறு பூக்கள்; வலுவுடைத்த முளைவிதைகள்.
மொழிதன் கலங்களின்
மரபணுச்சங்கிலி சேர்த்துடைத்துக்
கோர்ப்பின் தொகுப்பின் தேட்டம்
பிறக்கும் சொல் சிறக்க.

புத்தூற்றுக்களைத் தேடி நகரும்
ஆற்றுள்ள உயிரிது.
பழையதன்மேல் பாதையிட்டுப்
பதிவாகட்டும் வருஞ்சொல்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home