அலைஞனின் அலைகள்: கணம்

Friday, December 17, 2004

ஓய்வின் பின் பயணம்

ஓய்வின் பின் பயணம் உன்னதமானது.

வாசல்களை மூடிக்கொள்ளுங்கள்.
வரிச்சுக்களை இறுக்கி முடியுங்கள்.
காவற்காரர்கள் உள்ள கருந்தேசங்களைகூட
காலாற நடந்து கனவு களவாடப் போகின்றேன்.

போனகாலத்தைப் பொறுக்கப்போக,
வாரக் கொண்டு வருகின்றேன்
வரிசையாய் வசனநடையில்
ஊதும் சொற்கொம்பு.

எவர் இழந்த தேசத்துக்கும்
இனி நானே இளவரசன்.
இருப்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள்;
இழப்புகளைத் தவிர்த்துக்கொள்ளலாம்.

சினை அவிழ்ந்தமுடிப்புக்களிற் கரு அள்ளப்போகிறேன்;
பனை அவிந்த பானைகளில் மது அருந்தப்போகின்றேன்.

காலத்தைக் கையெடுத்து நூற்காற்றாடி விடுவேன்;
ஞாலத்தை நான் இனிமேல் நியாயமாய்ப் பகிர்வேன்.
மலைக்கூளத்துத் தலைநுனியில் தீக்கங்கு பொரிப்பேன்;
நசிகூட்டத்தோர் மத்தியிலும் துளிர் எழப் பா முடிப்பேன்.

வேண்டாதோர்,
வில்லெழு கணையாய் விசைப்பட்டு
விலகி நகர்க
வேறுதிசை.

பரந்த தேசம் தீணை எல்லாம்
ஒருகூ ரூசியால் ஊருடுவி முடையப்போகிறேன்
ஓ ருள்ளங்கை ஒடுங்க யுலகு.

ஓ!
சிறு ஓய்வின் பின் நடை உடைத்த பயணம் உற்சாகமானது.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home