அலைஞனின் அலைகள்: கணம்

Friday, December 17, 2004

அனுமதி

கோல் நுழைத்துத் துளைத்து,
திறவின் வழி வெளிப்போந்தேன்

காலப்பருக்கையின் பின் கூவிக் கலைத்தது,
விள்ளித் தின்றது இன்னொரு மொழி.

சொட்டுகின்ற நிழற்றுளிகளை
மென்று இன்னும் தொடரும் ஒளித்தேள்.

திரும்புகின்ற திசைகளை தெருமூலைகளில்
முறித்துப்போட்ட மூளைச்சந்தம்.

கடந்த மனிதர்களின் மேல்மிதந்த அனற்காற்று.

திண்தோட்தெருத்தோலை உந்திமிதித்த உட்பாதம்.

சுவாசம் மூசித்தேடும் மூர்க்கப்பசியின் முழுச்சடைப்பு.

தின்னத் தேடுதலுக்குப் பின்னும் வேட்டை;
தேடுதலும் கூடவோர் திக்கெக்கும் கண்வேட்டை.

சுற்றுமுற்றும் கூர்ந்து சுழன்று கொத்தியடங்கச் சபை,
சத்தம் செத்து சற்றுத் திரும்பிப்போனேன் என்னுள்ளே.

வாசற்கதவு வழிமறித்துத் தறித்தது.

அழைப்புள்ள அவனுக்கு மட்டும்தான்
அனுமதிப்பு.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home