அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

கொழும்பு ---பங்குனி '99

நளினமாக எழுதும் பொறுமையில்லாததால், முரட்டுத்தனமாக வா¢களை
முறித்துப் போட்டிருக்கின்றேன். மன்னிக்கவும்.

---------------------------------------------------------------------


சாணி சாத்திய
தேர்தல் சுவரொட்டிகள்;
மடுமாதா பின்புலத்தே
முன்னின்று கைதூக்கிக்
குவிக்கும்
அம்மை.
துப்பாக்கி ஒரு கை,
கிழித்த சுவரொட்டி மறு கையாக
நகர்காவலர்.

"இனவாதம் ஒழிப்போம்"
என்ற சொற்றொடா¢ல்
இனவாதம் வளர்க்கும்
யாக மேடைகள்,
கோணல் நேர்முகங்கள்.
பத்துக்கூட்டத்துக்கொரு
துப்பாக்கி வெடி,
டப்பிக் குண்டு.

பிரதான வீதியை நடுப்பிளந்து
முள் வேலி;
பின்னால்,
காவலுக்கு இராணுவம்.
உயிருக்கும் அஞ்சா
கவலைப்படாத பொதுசனம்.

ஆனைக்காலாய்
வீங்கிப்போன விலைவாசி,
பணம்.
பருப்பு வடையின் மிளகாயிலும்
விலை காரமாய் உறைத்தது.

வீதிக்குக் குறுக்குப்பாடாயே போவதென்று கங்கணம் கட்டிக்கொண்டு
பஸ்ஸிற்கும் லொறிக்கும் உராய்வுப்பாலம் போட்டோடும் ஓட்டோக்கள்.
(இடையில் விதி குறுக்காயும் ஓடும்).

கனடா போக நிற்கும் கனவு இளைஞர்கள்;
காசோடு மறைந்துபோன பயண முகவர்கள்.
தடக்குப்பட்டால், முடக்கெல்லாம்
தொலைத்தொடர்புநிலையங்கள்.
ஜேர்மன் மகன் குரலுக்குக் காத்திருக்கும் நாட்டு அம்மா.
ஒருநாள் பாஸ்போட்டுக்கு உடனடி படமெடுக்கும் மகள்.

தமிழருக்காக
தமிழைச் சிரச்சேதம் செய்வது
உங்கள் 'சன் ¡¢வி'.
செய்திஹள் வாசித்து,
இன்றைய ராசிபலன் அறிவிப்பது
தமிழ்ப் பகுத்தறிவாதிகளின்
தொலைக்காட்சியென அறிக.
கர்நாடக சங்கீதத்தோடு
ஒட்டியே தீருவேன் என்று
ஒட்டப்போட்டிருக்கும்
ஏ. வி. ரமணனின் ஜிப்பாவை
போட்டுத் தி¡¢யும்
இலங்கை இசையமைப்பாளர்கள்.
வால்க தமில்.
வாதம் வந்து
நாசமாய்ப்போக
சன் ¡£வி செய்தி வாசிப்பாளர் நா.

மீடிறன் வளை
'சூ¡¢யன்', 'சக்தி' வானொலிகள்;
காலையில் எழுந்தவுடன்,
தொலைபேசிகளூடாய்
உங்கட்கு
அன்றாட அத்தியாவசியக் கேள்விகள்
அறிவிப்பாளரூடாய்
இலவசம்;
உதாரணத்துக்கு ஒன்று:
"படையப்பாவில் ரஜனிக்கு
குடை பிடிப்பவர் யாரப்பா?"
"வீட்டிலே எத்தனை பேர் வெளியிலே?"
தொட்டுக்கொல்ல
என் சுவாசக்காத்தே,
என் உயிரே.

நாட்கணக்காய்
ஒருநாட் கி¡¢க்கெட் காணா நேரத்தே
மக்கள் காணும்
படப்பிரதியெல்லாம்,
பெயா¢ல் ஒட்டித்தொடங்கும்,
'காதலுக்கு....'
காதலுக்குப் புண்ணாக்கு;
காதலுக்குக் கால்களில்லை;
காதலுக்குக் காற்சட்டையில்லை.
காதலே நானொரு கழிசடை.

பத்தி¡¢கைகள்,
அஜித்தின் சின்னவயதுப்புகைப்படத்தை
அடையாளம் கண்டு கொண்டோருக்கு,
இரண்டு 'சீமா சா¡¢ எம்போ¡¢யம்'
சட்டைத்துணி இலவசமாய் வழங்கும்.
மிகுதி நேரத்தில்,
சிம்ரனின் மார்புக்கும் ஹீரா மார்புக்கும்
மாட்டுச்சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்.

சி. சு. செல்லப்பா செத்தது பற்றி
தனிநாடு கேட்கும்
தமிழனுக்குத் தொ¢யவில்லை.
கவலையில்லை.
ஆனால், மிக்க மகிழ்ச்சி..
இளைய தளபதி விஜய்
தாலி கட்டப்போவது,
இலண்டனிலிருக்கும்
இலங்கைத் தமிழ்ப்பெட்டையாம்.

'தமிழே உயிர்மூச்சு'
என்று வெப்பமூச்சு விட்டு விட்டு
ஒற்றைக் கதை, கவிதை என்று
கருதிக்கொண்டு படைத்தவனின்
மச்சான்மாரெல்லாம் ஒன்று கூடி
'கலா சாகர்',
'வித்யா மண்டை'.
'புத்தி பூஷண்'
கொடுத்தும்
தேர்தலில் கட்டுக்காசும் வரவில்லை
என்று கேள்வி.

போன வருடத்தே
ஐயப்பதாசர்கள்,
அளவுக்கு மிஞ்சி
அலைந்து தி¡¢ந்ததாயும் கேள்வி;
அடியேன் அறியேன்.
ஆனால்,
சாயிபாபா பக்தர்கள்
பல்கிப்பெருகி
முக்திக்கு அலைந்து தி¡¢ந்தது
காணக்கிடைத்தது.

கணினி கல்வி விளம்பரங்கள்,
விண்டோஸ் '98 (!!)
கற்பிப்பதாக விளம்பரங்கள்.
கற்கை விலை சொன்னால்,
வேண்டாம்....
வில்லங்கம்.
"தனியரு தமிழ் எழுத்துருக்கட்டு
விசைத்தறியில் அடிக்கக் கற்பிப்பதற்குச்
செலவு
ஆக 3000 மட்டுமே"
என்றார் ஒரு நண்பர்.

'மர்மதேசம் இது'
என்று சொல்ல,
தம்பி சொன்னான்,
'இல்லை,
இப்போது சன் ¡£வியிலிருந்து
ராஜ் ¡£விக்கு மாற்றி விட்டார்
பாலச்சந்தரென்று.'

நாடு வாழ்க.
கூடவே,
குப்பைக்கலாச்சாரத்துக்குச்
சூடம் எழுப்பும்
இளந்தலைமுறையும்

மேலே என்ன சொல்ல?

வடக்கிலும் கிழக்கிலும்
தெற்கிலும் மத்தியிலும்
என்ன நடக்கிறதென்று
நானும் கேட்கவில்லை;
எனக்கும்
எவரும் சொல்லவில்லை.

அம்மாவைத் தவிர,
ஆண்டுக்காலமாய்
மாறாமல் இருந்தது,
புட்டும் முட்டைப்பொ¡¢யலும்
தொண்டைக்குள் இறங்கமுன்னிருந்த
ருசி மட்டுமே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home