அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

காலம் தின்ற கவி

ஆண்மை நீர்த்துப்போன சுக்கிலமாம்
இன்றென் கவிதை;
இம்முட்டாளின் பெயர் கொண்ட அம்
முத்தான கவிஞன் எங்கே?-
-என்றும் கேள்வி.
காலங் கசக்கிக் கரைத்ததுவோ
உன் கவித்தனம்?-
இ·து இன்னொருவர்.
என்ன சொல்ல?
மூபத்து வயது;
முன்முடி தொலைய, சிறு
வெண்முகிலாய்ப் பின் நரை;
சுற்றம் இடைவெட்டாய்த்
துண்டிட்டுத் துவைத்தென் முழு நேரம்;
மாலை மளிகைக்கணக்கிற்காய்
மேலாளர்முன் மண்டியிடு சிறுமனம்;
சித்தனையும் பித்தனாக்கும்
ஓட்டங்காண் நான் சூழ் சுழலுலகு;
அத்தனையும் ஆவியாக்கி, அடங்கி
என் இளமைத்தார்மீக ஆவேசம்.
இத்தனைக்குள்,
சத்தாகத் தமிழிலெங்கே
-கவி(தை)-
சரளமாய்ப் பொழிவதெங்கே?

-என்றோ, எவருக்கோ, எதற்காகவோ இப்படி.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home