அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

இயங்க மறுத்து என் கனவுத்தொழிற்சாலை

இன்றைக்கென்று என் மனத்தொழிற்சாலைக்கு
என்னைப் பிடிக்கவில்லை,
என் வழமையான கனவுகளை
அரைத்துக் உதிர்ந்த உரைவீச்சிட்டு
உரமாய் பிள்ளை பெறு பெண்ணாய்
பெருமூச்சிட்டுத் தள்ளப்பிடிக்கவில்லை.

இயந்திரம் கோளாறென்று சொல்லி
மெள்ள முடங்கிக் கிடக்கும்.
முனகும்; முயங்கும்; ஆனால்,
எள்ளெனவும் ஏது காரணம் என்று சொல்லிவையாது.
கனவுகளின் கலவைகளில் மாற்றமில்லை.
அதனால், இதன் கஷ்டமும் எனக்குப் புரிதலில்லை.
சலிப்போ? ஒரே கலவையை அரைக்கும் கவலையோ?
என்னவோ தெரிதலில்லை எனக்கிங்கு.
வேலை பண்ணக் கள்ளமாய் கிடத்தல்....
.............................
........................
.............
.......
....
........ எண்ணமிருந்தும்
மேலே எழுத்திடல் எப்படியிடலென்று ஒழுங்கு வண்ணம் பிடித்தலில்லை
ஆக மேலே சொன்னதுபோல்,
இன்றைக்கென்று என் மனத்தொழிற்சாலைக்கு
என்னைப் பிடிக்கவில்லை,
என் வழமையான கனவுகளை
அரைத்துக் உதிர்ந்த உரைவீச்சிட்டு
உரமாய் பிள்ளை பெறு பெண்ணாய்
பெருமூச்சிட்டுத் தள்ளப்பிடிக்கவில்லை.
..............
......
...
ஆக, அர்த்தமற்றுச் சுருண்டு செத்த எழுத்துகள்
இங்கே நிற்கட்டும் இன்றைக்கு.
இன்னொரு நாளுக்கு எழுந்தாற் பார்ப்போம்,
என் உள்ளே இயல்பாய் எழுத்திட
ஏதுவாய் இளகி மன இயந்திரத்தொழிற்சாலை.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home