அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

முற்றுப்புள்ளியல்ல, ஒருகாற்புள்ளிதான்*

எது கவிதை என்று எனக்குத் தெரியாது,
எ·து எதுகை, எது மோனை என்றும் புரியாது.
கவியெழுதும் வெறி மட்டும் கண்டேன் என் மனத்தே.
சிறுகவியோ பெரும்கடலோ எழுதவேதும் தடையில்லை.
உணர்வு மட்டும் ஒருங்கவேண்டும்,.....
.....ஆயினும், வெறிக்காகமட்டும் வினைத்தரம்
விலைபோக விட்டிடல் சரியோ?
உறவுகளின் வேர்வாழ்தல் பிரிவுபோதிலே அறிதல்வரும்,
பிரசிந்தையார் கோப்பெருஞ்சோழன் உயிர்விடலென.
கூடலின் இன்பம் ஊடலிற்றானாம்; பின்,
அவ்வூடற்பிரிதுன்பம், தான்காணமீளக்காதல்வேண்டும்;
இரவு இரசிக்கப் பகல் வேண்டும், அவ்விளமை
வளமையறிய முதுமை வேண்டும். கவிதை ஊறப்
பொறுமை தேவை; ஆறி, அ·து இனிது நீராட,
அதன் தொலைவு, தொலைப்பு சிறிது நாள்வேண்டும்;
எனவே, இன்றிரவு, இங்கே, இட்டுக் காற்புள்ளி,.......
......................
.................................


*இது வெற்றுச்சொல் தேடி வெறு வசனவரிகளிற் கோர்க்கப்பட்டது,
சில கால-ஒருகாற்புள்ளியிடல்வேண்டு உணர்வுவெளிக்காட்ட.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home