அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

காலித்தெருநாய்

நாயொன்றைக் கடித்து வைத்தால் என்ன?
நாய் நம்மைக் கடித்து வைக்கும்; பின்,
தன்பாட்டிற்கே குலைத்து மற்ற நாய் தேடி,
வேற்றுக் குழந்தை, கிழவித் தசை தேடிப் போகும்
மாலை உணவிற்கு வாய்க்கு உருசியாய்.
எம் வேதனை, ஊசிமுனை அதற்கு வேண்டாத விடயம்.
ஏதோ காலை கழிக்கும் நீர், துரத்து பெண் என்று
நாய்க்கு நாளுக்கும் ஒரு கால் கை கடித்து வைப்பதும்
வாடிக்கை ஆய்ப்போயிற்று கல் கையில்லாக் கணங்களிலே.
எத்தனை நாளுக்குத்தான் வெற்று வெறி, புது முக மணம் மீது
பொய்ப்பழி போட்டுப் பார்த்திருப்பது புவி மனிதர் பொல்லாத
காலங்களில்?
கடித்து வைத்தாற் புரிந்து போகிறது,
நாய்க்கும் நமக்குள்ள வேதனை
அது கால் நக்காமல் நறுக்கி வைக்கும் நேரத்திலே.
இன்றைக்கு நான் துரத்தி விடி காலையிலேயே
வீதி விடலி நாய் ஒன்றைத் தெருச் சந்தில்
கழுத்தில் கடினமாய்க் கடித்து வைத்தால் என்ன?

0பின்னூடுகை:

Post a Comment

<< Home