அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

நகர்வுறாக் காலம்

நிலவும் காலம் நகர்த்துமாம்,
சூரியனும் அதுபோலவே.
அவை நகர்தல், அது நகர்த்த.
சரி,
இப்போது அதுவா முக்கியம்?
மனிதருட் தனிமை;
திரை விலக்கி வீதி வெறித்து
வாகனம் எண்ணி நான்;
வெறுஞ்சிறை.
வேலையற்று,
வெறுவானில் அலைபறவைபோல்,
வேகமிகு காதலின்
வெளிப்பரப்பின் அடியிங்கே,
மழையோடு மண்மலைபோல
நேரங் கரைந்தோடா வேதனையில்,
வினையற்ற வெறும் பெயரெச்சம்.
காலத்துக்கென்ன?
நகரும் கல்லூர் தேரையென.
ஆயின், நானோ?
தொழிற்புரட்சியுகம் பொரி
சிறு கருமானிடக்குஞ்சு.
வெறுமனே,
வீதிவெறித்து,
என்வானமெங்கும் வாகனமென்றாகி,
சே!
வெறுத்தது வாழ்க்கை இங்கே.

-94 டிஸெம்பர் 25, ஞாயிறு 14:25 பெய்ஜிங்

0பின்னூடுகை:

Post a Comment

<< Home