அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

நம்பிக்கை

வாழ்க்கை வழக்கம்போலவே
வேடிக்கை வளையத்துட் குதிரையோட்டும்;
நிலம் மட்டும் இங்கு நிறம் மாறியிருக்கிறது,
நிகழ்வுகளோ இன்னமும்
நேரத்துக்கடங்காமல்
நேற்றைப்போலவே
நிலைத்து
நிர்ச்சலனத்தே
விறைத்துக்கிடக்கும்.

பழையன கழிதலும்
புதியன புகுதலும்
இயல்பே; ஆயினும்,
பழையனவே புதியனபோல்
போக்குக் காட்டி
வாழ்கூட்டுக்குள் குந்தியிருத்தல்
இயல்புப் பிறழ்வாய்ப் புரியும்.

ஆயினும்,
நாளைச் சூரியன்
நமக்காய் விரியும்;
அது நிலை தவறினும்,
பின்வரு
இன்னொரு நாளொன்றில்,
தன் கரு அக்கினி அடிவயிறெரித்து,
உதய வானம் சிறுசூரியக்குஞ்சொன்று
எனக்கெனப் பொரிக்கும்.

நம்பிக்கை மட்டும்
பற்றிப்பிடித்தலுக்காய்
இங்கு
வாழ்க்கை வளையத்திற்
தொங்கும் கயிறு.

98/09/18

0பின்னூடுகை:

Post a Comment

<< Home