அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

தலைப்பற்ற ஒரு மனக்கவிவு

முகங்கள் மாறலாம்;
புருவங்கள் செதுக்கி, பருக்கள் புதிதாய்த் தோன்றலாம்;
புன்னகைகூடத் தன்னை மெல்ல மென்று தின்று கொல்லலாம்;
ஆனால், அக மனங்கள் மாறுமோ?

ஓடம் விட்டுப்போனதென மறு ஓடத்திற்குக் காத்திருப்பு;
வழியேதும் புலராது வேறாக விடுதலைக்கு;
கடல் ஆழம் காத்திருப்பினை மட்டும் ஏற்றுக்கொள்ளக் கற்றுத்தந்து
தான் செத்ததுபோல் இருக்கும் கண்பட்ட இடமெல்லாம் வான் தொட்டு
ஆர்ப்பரி உயிர்ப்பு உட்கொண்டு பொய் பேசாவூமையாய்.

நிழல்களினைத் துரத்தியதற்காக நிஜங்கள் தண்டனை கொடுத்திருக்கும்.
நிழல்கள் வேற்று விலங்குகள் பொறியுட் பிடிக்க மாரீசமான்களாய்
ஓடிக்காட்டும்.
சத்திய வனவாசம் தண்டனை பெற்றிருக்கும்;
சரித்திரம் போலிகளைப் பொலிவு பண்ணு சித்திரம் வரைந்து
காட்டும்.

என்றாலும்,
முகங்கள் மாறலாம்;
புருவங்கள் செதுக்கி, பருக்கள் புதிதாய்த் தோன்றலாம்;
புன்னகைகூடத் தன்னை மெல்ல மென்று தின்று கொல்லலாம்;
ஆனால், அக மனங்கள் மாறுமோ?

0பின்னூடுகை:

Post a Comment

<< Home