அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

மனக்குடித்தனம்

ஒவ்வொரு மனத்துள்ளும்
பெண் ஆண் குழந்தை கிழடு
எல்லாமே ஒன்றுக்குள் ஒன்று
ஒட்டி நெருக்கிக் கொண்டு
ஒண்டிக்குடித்தனம் நடத்தும்.
பெண் வலிது கிழித்தல் கண்டு இரக்கம் தூது விடும்;
ஆண் வலிதுக்கு வலிது வா பார்ப்போம் என்றி எடுந்து கூவும்;
குழவி செய்வதறியாது பெண் மடி உள்ளொதுங்கி
ஆண் பின் மறைந்து அழுதிருக்க,
முதிது பழையன கழியும் என்று பாரம் பரம் மேற் போட்டிருக்கும்.
அகம் தன் அகம் வாழ் குடித்தனத்தார்,
வெளிவரு வலிவு காண வகை செய்யத்துணி வடிவுகளின் வலிவு
காண்சமரில்
நேரம் சிறுபிள்ளைக்கைக் களிமண் பொம்மையாய் வடிவுகள் பெற்று,
பிறழ்ந்து போர் கொல்ல நண்டு பிளந்து வந்த குழுவன்புதிது வலி
பெற்று இறக்க
உழலும்.
வெளிக்காண் பால் பருவம் உருவம் எல்லாம் பொய்யாக்கி
ஒவ்வொரு மனத்துள்ளும் ஒரு முழு உலகே
மற்றதை அடுத்தது நெருக்கி மயக்கி
ஒண்டிக்குடித்தனம் முரண்பட்டுக் கூட்டாய் நடத்தும்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home