அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

சில தறிகெட்ட தர்க்கமறு கேள்விகள்

உன் வியர்வையில் எத்தனை விழுக்காடுகள்
வெயிலின் வீரியம் என்று சொல்லிப் போக முடியுமா?
நேற்றைய மாலை நிலவில் எத்தனை காதலர்கள்
ரோஜாப்பூக் கொடுத்து ஒரு உதட்டுப்பூ வாங்கிப் போனார்கள்
என்றாவது...
அதை விடு;
எத்தனை வண்ணாத்துப்பூச்சிகள் புழுப்பெருத்து மயிர்க்கொட்டிக் கூடுடைத்து
சிறகெடுத்துக் காற்றுக்கு காதல் கவிதை சொல்லிக் காலை போனது
பற்றி....
போகட்டும்;
காலை கடலுக்குள் தோய்ந்த கதிரவன்
மலைக்குள் மாலை காம விழா நடத்தப்போனது பற்றியாவது
ஏதாவது.....
புரியாது;
ஒரு நாட் குழந்தையின் முதல் வாந்தியின் புளித்த பால் மணம்
பற்றியாவது
சில பந்திகள் எழுதிவைக்கும் திறன்......
எதுவுமே தெரியாது;
பிறகுமென்ன இலட்சத்தொரு அர்ச்சனைக் கணக்கு பார்ப்பாய்
உன் காதலினைப் புரிந்துகொள்ளாக் கன்னியர் தொகை பற்றி,
தூரப்பார்வைக் கண்ணாடிக்குள்ளாக கணினிப் பொறியியலாளா?

0பின்னூடுகை:

Post a Comment

<< Home