சுதந்திரம்/சுதந்தரம்
எப்போது கிட்டியதென்பதா எம் அவசியம் இன்று?
அல்லது....அன்று,
எவ்வாறு கொட்டியதென்பதா இன்றதன் தத்துவம்?
கிட்டியதை, கொட்டியதை,
எப்படிக் கட்டிக்காக்கின்றோம் என்பதன்றோ?
சுந்தரம், சுரம், தரம், தந்தரம்-
அத்தனை அழகறிவு அம்சமும் அதற்குள்
அடங்கக் கண்டனரென்றனர் சில நாட்டே;
'சுதந்தரமா, சுதந்திரமா' எனப் பலகட்சி,
பன்றிக்குட்டியெனப்போட்டு, கச்சை கட்டி,
கத்தி, கத்தி கொணர்ந்து பிறர்தலை, உயிர்
துச்சமென கொய்துபோட்டார் பல நாட்டே;
சரி, பிறர் போகட்டும் விடெனில்,
என் நாட்டே,
அத்தனை ஆழழுத்த அர்த்தங்கொள் சொல்
உள்ளதொன்றென்று எண்ணியதில்லையாம்
எவரும் இதுவரை எக்காரணங்கொண்டும்.
அதிலென்ன தவறு?
அற்றதென்றெண்ணுவதை ஆராதித் தர்ச்சிப்பது,
அறிவுள்ள அனைத்துயிர்க்கும் அங்கமொட்டு அசிங்கமே;
நமக்குத்தான் தெரியுமே,
நம்பிக்கையற்றதில் நம்பிக் கைவைப்பது
நம்நாட்டிற்கிழுக்கென்பது நன்றாகவே நம்பெற்றோர்போல்.
அல்லது....அன்று,
எவ்வாறு கொட்டியதென்பதா இன்றதன் தத்துவம்?
கிட்டியதை, கொட்டியதை,
எப்படிக் கட்டிக்காக்கின்றோம் என்பதன்றோ?
சுந்தரம், சுரம், தரம், தந்தரம்-
அத்தனை அழகறிவு அம்சமும் அதற்குள்
அடங்கக் கண்டனரென்றனர் சில நாட்டே;
'சுதந்தரமா, சுதந்திரமா' எனப் பலகட்சி,
பன்றிக்குட்டியெனப்போட்டு, கச்சை கட்டி,
கத்தி, கத்தி கொணர்ந்து பிறர்தலை, உயிர்
துச்சமென கொய்துபோட்டார் பல நாட்டே;
சரி, பிறர் போகட்டும் விடெனில்,
என் நாட்டே,
அத்தனை ஆழழுத்த அர்த்தங்கொள் சொல்
உள்ளதொன்றென்று எண்ணியதில்லையாம்
எவரும் இதுவரை எக்காரணங்கொண்டும்.
அதிலென்ன தவறு?
அற்றதென்றெண்ணுவதை ஆராதித் தர்ச்சிப்பது,
அறிவுள்ள அனைத்துயிர்க்கும் அங்கமொட்டு அசிங்கமே;
நமக்குத்தான் தெரியுமே,
நம்பிக்கையற்றதில் நம்பிக் கைவைப்பது
நம்நாட்டிற்கிழுக்கென்பது நன்றாகவே நம்பெற்றோர்போல்.
0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home