அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

தெளிந்த இரவு வானம்

தெளிந்த இரவு வானம்
விழும் விண்கல்
உணர்வு எ¡¢ந்த நான்.

தெளிந்த இரவு வானம்
முகிலுட் சந்திரன்
என்னுள் அவள் முகம்.

தெளிந்த இரவு வானம்
மின்னும் உடு
தாகம்கொள் ஒட்டகம்.

தெளிந்த இரவு வானம்
தூரத்துக் கானம்
அருகே மீட்டாத வீணை.

தெளிந்த இரவு வானம்
மணக்கும் மல்லிகை.
உணர்வு .. உயிர்க்கும் பீனிக்ஸ்.

தெளிந்த இரவு வானம்
குளிர் காற்று
அடர்த்தி உருகித் துக்கம்.

தெளிந்த இரவு வானம்
முற்றத்து வெளி
எல்லை தொலை மனம்.

தெளிந்த இரவு வானம்
நகரும் இரயில்
அணுப்பிளவு .. நாகா£கம்.

தெளிந்த இரவு வானம்
நிழலிற் பறவை
தொடரும் அணுப்பி¡¢க்கை.

தெளிந்த இரவு வானம்
மேலே விமானம்
இறங்க மறுத்து ஞாபகம்.

தெளிந்த இரவு வானம்
மாடிக் கட்டிடங்கள்
வதையடை தூங்குதேனி.

தெளிந்த இரவு வானம்
கீழே நான்
தொலைந்த சூழ் உலகம்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home