அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

காலைச்சூ¡¢யன் எழுச்சி

காலைச் சூ¡¢யன் எழுச்சி
ஆர்ப்பா¢ கடல்
சலன அலை மனது.

காலைச் சூ¡¢யன் எழுச்சி
காற்றேகு பனி
குளிர் இரவுப் புணர்வு.

காலைச் சூ¡¢யன் எழுச்சி
சூடான தேநீர்
கடந்த நாட் பிரசினம்.

காலைச் சூ¡¢யன் எழுச்சி
குளிர்நீர்க் குளியல்
காலைக் கனவில் என்தேசம்.

காலைச் சூ¡¢யன் எழுச்சி
பலகணிக் கதிர்
முளைப்பில் முழு நம்பிக்கை.

காலைச் சூ¡¢யன் எழுச்சி
தெரு வாகனம்
தேங்கி நொ¢படும் நிலவு.

காலைச் சூ¡¢யன் எழுச்சி
குழந்தை அழுகை
வீட்டுமுற்றத்தே புது ரோஜா.

காலைச் சூ¡¢யன் எழுச்சி
சன்னற் குருவி
வனத்தே பறக்கும் மனம்.

காலைச் சூ¡¢யன் எழுச்சி
முகத்திற் காற்று
அவள் கூந்தல் மென்மை.

காலைச் சூ¡¢யன் எழுச்சி
ஆற்றின் ஓட்டம்
தெளிவில் என் சிந்தனை.

காலைச்சூ¡¢யன் எழுச்சி
மரத்து அணில்
கொறிக்கும் இளம் நினைவு.

காலைச்சூ¡¢யன் எழுச்சி
பல்லி வாய்ப் பூச்சி
அவையிலே எனது நடை

0பின்னூடுகை:

Post a Comment

<< Home