அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

புகைவண்டித் தரிப்பிற் காத்திருப்பு

புகைவண்டித் தரிப்பிற் காத்திருப்பு
எதிர்த்திசை வண்டி
அன்றும் வராத அவள்.


புகைவண்டித் தரிப்பிற் காத்திருப்பு
பச்சை விளக்கு
முத்தத்தின் முன் நாணம்.


புகைவண்டித் தரிப்பிற் காத்திருப்பு
உடைந்த இருக்கை
எரிந்த காதற் கடிதங்கள்.


புகைவண்டித் தரிப்பிற் காத்திருப்பு
முறுக்கு வடை
கோபத்தில் அவள் பார்வை.


புகைவண்டித் தரிப்பிற் காத்திருப்பு
ஐன்னல் இருக்கை
முத்தத்தூறல் மூடிய கண்கள்.


புகைவண்டித் தரிப்பிற் காத்திருப்பு
அருகிற் கிழவி
அணில்பற்றிப் பேசி அவள்.


புகைவண்டித் தரிப்பிற் காத்திருப்பு
விழியிற் கரி
உவர்ப்பானது அவள் மூக்குத்தி.


புகைவண்டித் தரிப்பிற் காத்திருப்பு
இறங்கும் பயணிகள்
கலங்குகடல் கதிரவன் களைப்பு.


புகைவண்டித் தரிப்பிற் காத்திருப்பு
புறப்படும் வண்டி
நெடும்கனவு யாத்திரை ஒன்று.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home