அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

காற்றோடு பறத்தல்

எதிர்க்காற்றுத் திசைமுன்னே
இறக்கை
விசைப்படவியலாக் கணத்தே
காற்றோடு பறத்தல்
ஞானம்.

காற்றடி திசை உணராச்
சிறுபறவை அது.
புதுப்பறவைக்குச்
சின்னச் சிறகடித்தல் மட்டுமே
இன்றைய இலக்கு
-தானும் பறந்திருப்பேன் என்றுணர்தல் மட்டும்
அதன் வேள்வி.

தா¢க்கப் பொருந்தும் தீவுகள்,
காற்றோடு திசையுமுண்டு;
மறுதிசையுமுண்டு.

வசிக்கப்பொருந்தும் நிலத்தே
வாழ்ந்திருத்தல் மேன்மை.

பின்வாங்குதல் என்பதுகூட
முடிவுக்கும் தோற்றுப்போதல் அல்ல.
இற்றைக் களமுணர்தல்தன்
சொட்டிய
ஞானப்பிழியல்.

என் இயலாமையின் எல்லை
இதுவென வரையிறுத்திருத்தல்
சடயோகம்.

தன்னுடை உளவலிவும்
நிகழ்நேரம்கேள் மனப்பலமும்
ஒன்றிடைப்படாததென
உணர்பவன் பெயர்
யோகி.

ஆற்றிலே தான் நீந்தி
கரைமணலிலே கண்ணிவைத்து
முதலை காத்திருப்பான்
ஞானி.

கல்லுட் தூங்கும் தேரை,
காலத்தே முளைக்கும் சிறகு.

மெல்லெனத் தழைக்கும்
இறகு;
கூடவே,
மென்மை வற்றிக்
கூராகும் கட் குறி.
சிறுபுள்ளுக்கோ மாறாது
தூரப்பரப்பே
பாய் வி¡¢க்கும் கனவு.

பறத்தல் என்பது வீரம்.
அதுவரை
தா¢த்தல் என்பது ஞானம்.

கடல்நீச்சலும் கவியாத்தலும்
அதுவே போலும்.

'99 மே 20, வியாழன் 14:59 மநிநே

0பின்னூடுகை:

Post a Comment

<< Home