ஞாயிற்றுக்கிழமை
காலத்துகள் குவியும் கட்டிலுட்
புரள்தலாய்க் காலைநேரம்.
சாளரத்திரை ஓரம் ஒதுக்கி எண்ண,
போய்வரும் வாகனக் கணக்கிடை
கண் சிமிட்டிச் சொடுக்கும்.
சலவை இயந்திரம்
ஒலி உருக்கியோட்டும்;
பத்திரிகையுட் பதிந்த
சோம்பலுக்கு ஒரு சாட்டை.
அரிசி ஏந்தும் எறும்புச் சாரி,
அறைக்கதவில் முகிழ்
சலவைத்தூள்த் தடயத்தடம்.
பிணைப்பிருத்தும் தொலைபேசி
வரும்; போகும்;
பேச மறந்து தொலைத்தவை
என்னைப் வெட்டிப் பேசும்
பற்பசை ஒட்டலுக்குள்.
முட்டைகள்,
-வெண்மையோ அ·தின்மையோ-
பொரிதலுட் கருகுதட்காய்க்
கருக்கட்டப்பட்டவை.
காற்றின் வீச்சத்துட்
கரகரத்துத் கதவு
திறப்பார், அடைப்பார்
அண்மைவீட்டார்.
ஆற்றோரப்படுக்கை நடை
ஆற்றுதல் படுத்துகைகாகும் குடை;
நிழலுள் நடை நீளாதோ
என்று நெஞ்சம்.
கடந்துபோயின கப்பல்கள்;
கனமாய் இரும்புச் சிப்பங்கள்.
இறங்கும் ஏறும் சுமை,
எதுவாயும் இருக்கலாம்;
இருப்பைப் பொறுத்தது,
விற்றலும் வாங்கலும்.
ஓடும் தொலைக்காட்சியுள்
ஓரோர் போது ஒட்டுதல்;
மிச்சக்காலம்,
காட்சி தொலைப்படும்...
கதிரை முன்னே
கனவுகள் பூச்சியாய் மிகைப்படும்;
வெளிப் போகும்; வரும்;
வெவ்வேறு வியூகத்தே விரிந்து பரவும்.
இரவு உணவுள்,
வரும் வாரத் தினச் செயல்கள்
தினவெடுத்துக் கால் திமிறும்.
பின்வரு
மிகுதிநேரங்களில்,
விளக்கணைத்து
இருட்சுவரில்
என்னைத் திட்டமிட்டுத்
தவிர்ப்பவருள்ளும் வெறுப்பவருள்ளும்
என்னைப் புரிந்துகொள்ளப்
போராடி நான்.
கழிவிரக்கம்
அறையாகும்;
திங்கள் காலை
அருகாகும்.
முற்றுப்புள்ளியாய்
நித்திரை
மோனம்.
'99 ஜூன் 14, திங்கள் 12:08 மநிநே
புரள்தலாய்க் காலைநேரம்.
சாளரத்திரை ஓரம் ஒதுக்கி எண்ண,
போய்வரும் வாகனக் கணக்கிடை
கண் சிமிட்டிச் சொடுக்கும்.
சலவை இயந்திரம்
ஒலி உருக்கியோட்டும்;
பத்திரிகையுட் பதிந்த
சோம்பலுக்கு ஒரு சாட்டை.
அரிசி ஏந்தும் எறும்புச் சாரி,
அறைக்கதவில் முகிழ்
சலவைத்தூள்த் தடயத்தடம்.
பிணைப்பிருத்தும் தொலைபேசி
வரும்; போகும்;
பேச மறந்து தொலைத்தவை
என்னைப் வெட்டிப் பேசும்
பற்பசை ஒட்டலுக்குள்.
முட்டைகள்,
-வெண்மையோ அ·தின்மையோ-
பொரிதலுட் கருகுதட்காய்க்
கருக்கட்டப்பட்டவை.
காற்றின் வீச்சத்துட்
கரகரத்துத் கதவு
திறப்பார், அடைப்பார்
அண்மைவீட்டார்.
ஆற்றோரப்படுக்கை நடை
ஆற்றுதல் படுத்துகைகாகும் குடை;
நிழலுள் நடை நீளாதோ
என்று நெஞ்சம்.
கடந்துபோயின கப்பல்கள்;
கனமாய் இரும்புச் சிப்பங்கள்.
இறங்கும் ஏறும் சுமை,
எதுவாயும் இருக்கலாம்;
இருப்பைப் பொறுத்தது,
விற்றலும் வாங்கலும்.
ஓடும் தொலைக்காட்சியுள்
ஓரோர் போது ஒட்டுதல்;
மிச்சக்காலம்,
காட்சி தொலைப்படும்...
கதிரை முன்னே
கனவுகள் பூச்சியாய் மிகைப்படும்;
வெளிப் போகும்; வரும்;
வெவ்வேறு வியூகத்தே விரிந்து பரவும்.
இரவு உணவுள்,
வரும் வாரத் தினச் செயல்கள்
தினவெடுத்துக் கால் திமிறும்.
பின்வரு
மிகுதிநேரங்களில்,
விளக்கணைத்து
இருட்சுவரில்
என்னைத் திட்டமிட்டுத்
தவிர்ப்பவருள்ளும் வெறுப்பவருள்ளும்
என்னைப் புரிந்துகொள்ளப்
போராடி நான்.
கழிவிரக்கம்
அறையாகும்;
திங்கள் காலை
அருகாகும்.
முற்றுப்புள்ளியாய்
நித்திரை
மோனம்.
'99 ஜூன் 14, திங்கள் 12:08 மநிநே
0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home