அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

சற்றே விலகியிருப்பீரோ, பிள்ளாய்?

ஏன் சேர்ந்து கொள்ளவில்லை என்று கேட்கமுடிகின்றது..
ஏன் சேர்த்துக் கொள்ளமுடியவில்லை என்று கேட்கத் தோன்றவில்லை.

செய்யக்கூடாது என்று தடுக்கக் கை துடிக்கின்றது.
செய்கைக்கும் முற்செய்கை முளையுண்ட விதை புரிதலில்லை.

கூட்டற்செய்கை தேர்ந்து கொள்ளாமல்
கழிக்கமட்டுமே கற்றுக் கொடு எனக் கேட்க முடிகின்றது
இன்னமும் படிக்கத்தொடங்காத
ஒவ்வொரு குழந்தை மனதுக்கும்

நீங்கள் - நாங்கள் - அவர்கள்
-எல்லாமே சுலபத்திற் சுட்டி
வானில் அடுக்குமாளிகை கட்டிக் கொள்ளமுடிகின்றது
வெறுமனே என் அப்பன் கப்பல் ஏறின காலத்தை வைத்து
வாய்கடந்து வழிந்து கால வழி கடக்கும் கதைகளிலே

தன்னை மட்டும் வைத்தே தட்டாமாலை சுற்றவே முடிகின்றது
தேசத்துக்கும் தீவுக்கும்
தவளைக்கும் பாம்புக்கும்
உனக்கும் எனக்கும்

அவ்வப்போது ஆளாளுக்கு
அவனவன் சரித்திரம்
நந்தி மறைத்த நடுகல்

இவர்காய்,
சற்றே விலகியிருப்பீரோ, பிள்ளாய்?

0பின்னூடுகை:

Post a Comment

<< Home