அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

விழுதுவிழுத்திகள்

விரலசைப்பினிலே
விழுதுவிழுத்திகள்.

ஆட்டக்கூத்தில்
அசையும் கைகள்.

திரைக்குப் பின்னே,
துடிக்கும் உடுக்கை.

தரைக்கு முன்னே
விரியும் தரணி.

விழுத்திய விழுதோ
நுழைந்துட் டுளைக்கும்.

நிலைப்பதும் நெரிப்பதும்
அளவிருப்பினி லடக்கம்

பாவையோடு கழியும்
பாட்டும் பாராட்டும்.

கூத்திடு விரல்கள் சேரா
குத்திடு பார்ப்பான் விழிகள்.

ஆட்டும் கைகள் தேவை
சேர்காசும் சில்லறையும்

சிறு பாவைக்கில்லை
சிரித்தலும் அழுதலும்

நிறப்பாவைக்கோ வாழ்க்கை
மரப்பாவாடையோடு முற்றும்.

தொங்கட்டானாட,
மரப்பட்டை பிரித்து
மண் விழுத்தினாலும்
உடல் பட்ட விழுதுகள்,
மெல்லத் துளிர்ப்பதுமில்லை;
துள்ளித் தளிர்ப்பதுமில்லை.

விர லுடல் தக்கத் தக்கிட்டாலும்
பரு சடக்கல் நிலை ஒக்கப்பிறந்தது
மரப்பாவை மனது.

'00/05/01

0பின்னூடுகை:

Post a Comment

<< Home