அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

To Juan Miguel Gonzalez

ஒரு தாய்க்கு இருபிள்ளைஇயற்கையிற் பிறப்பதுண்டு;இருதாய்க்கும் ஒருபிள்ளைசெயற்கையிற் பிறப்பதுண்டு;ஆனால்,இரு நாட்டுக்கொரு பிள்ளைஎன இருப்பதுண்டோ?
உண்டு.
இன்றுமுதல் எல்லாம்அவரவர் அரசுக்குச் சொந்தம்.உடல், உணர்வு,மனைவி, குழந்தை எல்லாமேஆக்கப்பட்டன அரசுடமை.இதில் நாளைத் தேவைக்குவேண்டியதைஇன்றைக்கே விண்ணப்பித்துக்கொள்....இல்லாவிட்டால்,இதிலெதுவும்எவருக்காவது வாடகைக்கும் விடப்படலாம்,உன் அரசு வாழ்வதற்கு.
வரும் கிழமைக்கு மனைவியைக் கூட,இன்றைக்குப் போடு தொலைக்காட்சியில்,நிமிட விளம்பரத் தண்டோரா.
உன் பிள்ளையோடு நீ பேச,ஊரிடம் உத்தரவு பெற்றுவரஇனிஉனக்கொரு சட்டத்தரணி வேண்டும்.
குழந்தைகள் பெற்றுக்கொள்ள போட்டுக்கொள்ஓர் ஒப்பந்தத்தில்உந்தன் கையப்பம்.- பெற்றபின், பிரிந்தால்,தெருநாய் போட்ட குட்டிகள் போலகடலிலோ கரையிலோகண்டெடுத்தவருக்குச் சொந்தம்உன் குழந்தைகளும் அவர்களின் குரல்வளைக்களும்.
உன் வீட்டில்ஒன்றுக்குமேல் நாற்காலியும்ஒரு சின்ன நாய்க்குட்டியும்இல்லை என்பதுகூட,உன் விந்து விழுத்திய வித்தின் விழுதுஉனதில்லை என்று சொல்லஒரு பெரும் அத்தாட்சி ஆகலாம்.
மன்னன் சொலமன் சபைக்கு வராத வழக்கொன்றுவந்தது பூவுலகுக்கு,இன்று.
வேறு வழியில்லை;வாங்கிக்கொள்.
ஏற்றுக்கொள் உண்மையை.
நீ பெற்ற பிள்ளைகளைப்போலவே,நீயும் போட்டி அரசுகளின்கால்களிலே அகப்பட்ட உதைபந்து.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home