அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

Obssessed with YayaAthi

யயாதியின் முதுமைக்கும் முன்னமே முதிர்ந்ததுதான்
முதிர்ச்சியைப் பற்றிய முடியாத முணுமுணுப்புக்கள்.

செல் வழி அடைத்துப் போக,
வயது பற்றி வாயுள்ளே கால் நட்டு,
நீதி நெறி மொழி வழமை வட்டப்பந்தல் வரைதல்,
முதிர்ச்சியுறா முதுமையின்
மூவிரல் குவி சின்முத்திரை.

முதிர்ச்சி எனப்படுதல்,
வாலிபத்தும்
திரை அற்றோர் முகம் நிமிர்த்தி
உளம் விரித்துப் பேசுதலாம்.

அயர்ச்சியற்றுப் பிறன்முதிர்ச்சி,
இருத்தல் இன்மையைச்
சுட்டலும் சாடலும்
முதுமையின் முதல் அடையாளம்.

யயாதி...
அவன், பின்,
இறந்தானா இருந்தானா...
எனக்குத் தெரியவேண்டும்.

3பின்னூடுகை:

  • கலையின் உன்னதவடிவம் ஒவியமும், புகைப்படமும் என்று முடிவுக்கு வந்து ஆழ்ந்துவிட்டீரோ என்று நினைத்தேன். படிமத்திலிருந்து கவிதை, முன்னேற்றம்தான்!

    By Blogger ROSAVASANTH, at Monday, December 13, 2004 5:39:00 AM  

  • அடப்பாவி, ஒரே நாளில் இத்தனையா? தாங்குமா! இதென்ன புத்தக வெளியீடா?

    By Blogger ROSAVASANTH, at Monday, December 13, 2004 5:41:00 AM  

  • அவன் மறுபடியும் பிறந்து juan ponce de leon ஆகத் திரிந்தானென்றும் பிறகு எல்லா முதிர் இளசுகளுக்குள்ளும் புகுந்து முதுமையைப் பற்றிப் பயமுறுத்தவும் கவிதையெழுத வைத்தானென்றும் செவிவழிச்செய்தி:)
    முதிர்ச்சியின் வரையறை நன்று. ஆனால் இந்த "குற்றமொன்றும் பாராட்டித் திரிய வேண்டா"மை எங்கே வைக்கிறது?!

    By Blogger சுந்தரவடிவேல், at Monday, December 13, 2004 9:05:00 AM  

Post a Comment

<< Home