அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

ஆனையிறவு

பிணக்குழி மூடிப்பூத்த
எருக்கலைத்தோப்பு.

இருட்டினில் உறங்கும்
மணற்றரைச் சமவெளி.

கூர்ச்சப்பாத்து மிதி
அடிபடிந்தும் அடிபடியா
சன்னம் பூக்கும் சுடுமண்.

இறந்த காலம் இரைச்சலிடும்
வெளிக்காற்று உப்பளம்.
வரட்சியின் பசலை
மேனியெல்லாம்
வெடி பாளம் பாளம்,

ஒரு கழித்த ஒற்றைப்பாதையும்
குழி அதிர்ந்த தார்வீதியும்
மொட்டைப்பனையும்
சில மூச்சு விட்டரற்று சத்தமும்

ஊரோய்ந்த தேசத்தில்
ஒட்டி உராய்தல் மட்டும்
மூக்கு முனைமுள்ளால்.
தட்டை நாகதாளி
குத்திச் சுரக்கும் பால்
கள்ளி விரல் கீறி.

வீரிடும் குழந்தை,
விதிர்விதிர்த்து
விரல் சூப்பும்.
ஆகும் காயம்
அடையாளம்.

வெறி வியாபித்த வெட்டைவெளி.

***
நுரைக்கும் தொடுவான்புள்ளி.
எண்ணத்து உரைகல்.
அரித்துக் குதிர்க்கும்
அலையோசை.
கட்டறுக்கும் காலம்.

***

காலப்பெட்டகம்
சுற்றியது கரமுள்.

மற்றப்புறத்தும் கேட்டது
விரல் சுட்ட ஒலி.

உப்பங்காற்றும் வெடித்தது
காற்கண்ணி.

கட்டுப்பட்டாலும்கூட,
தட்டிக் கேட்கும்
சட்டம் இனி வேறு.

'00/05/09 21:49 CST

0பின்னூடுகை:

Post a Comment

<< Home