அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

ஒத்திப்போடுதல்

கடைசி நிமிடத்தின் கடைசிக்கணங்கள்வரை ஒத்திப்போட்டோம்;
அவள்களிடம் காதலிக்கிறாயா என்று சன்னித்துக் கேட்டதை,
தெற்கே பறந்த ஒல்லிப்பறவையின்
விழுந்த இறகைப் பற்றிய விரலடிக்கவிதையை,
மழைக்குப் பின்னான மண்ணுழவையும் முளைவிதைப்பையும்,
ஒற்றைத் தாளாயும் ஒருகோடியாயும்
முற்றி வழிந்த கடனுக்குச்
சொல்லவேண்டிய தவணையை,
- இறுதிவரை எல்லாமே
வாசற்படி தாண்டித் தத்தி,
வாயில் நொட்டித் தட்டும்வரை
ஒத்திப்போட்டோம்;
உணர்ச்சி மீறாமல், கருத்தோடு கதைத்தலென்று
வசதியாய் எம் வினையை வருத்திவேறு
விதித்துக்கொண்டோம்;வழிப்படுத்திக்கொண்டோம்.

அந்தக்கடைசி நொடிகளிலும்கூட நழுவிப்போயின,
மற்றவர் உட்தோற்றங்கள் மீதான தேற்றங்களின் நிறுவுகையும்
பிறன் பழியை எமதுடல் சுமக்கும் விதி மேலான மறுப்புரையும்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home