அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

சமரசம்

எல்லாவற்றுடனும் சமரசம் என்றாகிவிட்டது;
சண்டைக்காரருடன்,
சந்தேக நபர்களுடன்,
சங்கேதமொழியுடன்,
சாக்கடையுடன்,
சரித்திரத்துடன்,
சத்தத்துடன்,
சாத்தானுடன்....
எதனுடனுமே எளிதாகி,
சகவாசதோஷத்திற் சமரசம் என்றாகி......

'இனியும் எட்ட,
ஏதேனும் மிச்சம் இருக்கின்றதோ?'
என்றான கேள்வி ஒன்றே இருப்பில் மிஞ்ச,

இலகுவில் இளித்தார்கள்;

'இருக்கிறது,
உன் ஆதி இலக்கு'

'00/05/25

0பின்னூடுகை:

Post a Comment

<< Home